இந்தியா

எடியூரப்பா-சித்தராமையா சந்திப்பின் உள்நோக்கம் என்ன?: குமாரசாமி கேள்வி

Published On 2022-06-08 03:12 GMT   |   Update On 2022-06-08 03:12 GMT
  • மாநிலங்களவையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 32 வாக்குகள் உள்ளன.
  • ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வெற்றி அடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மைசூரு:

முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவருவமான குமாரசாமி மைசூருவுக்கு வந்தார். இதையடுத்து அவர், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தெற்கு பட்டதாரி தொகுதி தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் ராமுவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் எடியூரப்பா-சித்தராமையா சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் 2 பேரும் எந்த நோக்கத்துடன் சந்தித்து பேசினார் என்பது தெரியவில்லை. தனி அறைக்குள் 2 பேரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நோக்கம் என்ன?.

மாநிலங்களவை தேர்தல் போட்டியில் இருந்து ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் விலக வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். சித்தராமையாவுக்கு பா.ஜனதா தோல்வி அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நான் அல்லது எனது தந்தை தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பார்.

மாநிலங்களவையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் 32 வாக்குகள் உள்ளன. ஆனால் காங்கிரசுக்கு குறைவான வாக்குகளே உள்ளது. இதனால் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் வெற்றி அடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தேவைப்பட்டால் எங்களது 2-வது வாக்குகள் உரிமையை காங்கிரஸ் வேட்பாளருக்கு கொடுக்கிறோம்.

அதற்கு காங்கிரஸ் கட்சி அவர்களது இரண்டாவது வாக்குகள் உரிமையை ஜனதாதளம்(எஸ்) வேட்பாளருக்கு தரவேண்டும். இதுசம்பந்தமாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலாவுடன் தெரிவித்துள்ளேன். இதற்கு தற்போது வரை அவர் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது எம்.எல்.ஏ.சா.ரா. மகேஷ், ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் ராமு உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News