இந்தியா

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால்

சிசோடியாவை இன்னும் 3 நாளில் சி.பி.ஐ. கைது செய்யும் - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2022-08-23 14:09 GMT   |   Update On 2022-08-23 14:09 GMT
  • குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பேசினார்.
  • இன்னும் 3 நாளில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்யும் என்றார்.

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் ஆண்டு இறுதியில் வரவிருக்கிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை அல்லது மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவி தொகையாக வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டார்.

இதற்கிடையே, கெஜ்ரிவால் மற்றும் டெல்லி துணை முதல் மந்திரி சிசோடியா இருவரும் குஜராத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் முதலில் அகமதாபாத் நகருக்கு நேற்று சென்று, மக்களிடையே ஆதரவு திரட்டினர்.

இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று 2-வது நாளாக பொதுகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் பேசுகையில், அடுத்த 10 நாட்களில், மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அமைப்பு கைது செய்யும் என எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் தற்போது அடுத்த 2 முதல் 3 நாட்களிலேயே அவர் கைது செய்யப்படுவார் என நான் உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News