இந்தியா

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2023-12-29 21:55 IST   |   Update On 2023-12-29 21:55:00 IST
  • இரண்டு பேர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழப்பு.
  • கர்நாடகாவில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 702 ஆக உயர்வு.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், கர்நாடகாவில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 37 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் அதிகபட்ச சோதனைகள் நடத்தப்பட்டன. நடத்தப்பட்ட 2,616 சோதனைகளில், 82 பேருக்கு தொற்று உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம் என தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News