இந்தியா

யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி

Published On 2025-08-05 17:52 IST   |   Update On 2025-08-05 17:58:00 IST
  • எனது சகோதரர் இந்திய ராணுவத்தின் மீது அதீத மரியாதை கொண்டவர்.
  • ராகுல் பேச்சு தவறுதலாக திரிக்கப்பட்டுள்ளது என்றார் பிரியங்கா.

புதுடெல்லி:

சீன விவகாரம் தொடர்பாக இந்திய ராணுவத்தை தவறுதலாக விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.

இந்த வழக்கில் நீதிபதிகள், ராகுல் காந்தியை கடுமையான கேள்விகளால் அவரை சங்கடத்திற்குள் ஆளாக்கினர்.

இதேபோல, மத்திய அரசும் ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. ராகுல் காந்தி குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.யான பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

யார் உண்மையான இந்தியர் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யவேண்டாம்.

எனது சகோதரர் இந்திய ராணுவத்தின் மீது அதீத மரியாதை கொண்டவர். எப்போதும் அவர் குறைத்துப் பேச மாட்டார். அவர் எதுவும் தவறாகப் பேசவில்லை.

இவருக்கு ஒரு எதிர்க்கட்சி தலைவராக கேள்வி எழுப்ப உரிமை உண்டு. அரசுக்கு சவால் விடும் வகையில் கேள்வி கேட்பது அவரது கடமை.

அந்த அடிப்படையிலேயே சீன விவகாரம் குறித்துப் பேசினார். ஆனால், அவரது கருத்து தவறுதலாக திரித்து பேசப்படுகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News