இந்தியா

இந்திய ஜனநாயகத்திற்கு இது கறுப்பு நாள்- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

Published On 2023-08-07 19:19 GMT   |   Update On 2023-08-07 19:19 GMT
  • டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • மக்களுக்காக உழைக்க உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை பறிக்க அல்ல. மக்களுக்காக உழைக்க உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை பறிக்க அல்ல.

மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

மசோதா நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே தொலைக்காட்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.

அப்போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமர் மோடி மதிக்கவில்லை. டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளனர். ஆனால் பிரதமர் மோடி நீதிமன்றத்தின் உத்தரவை கேட்க விரும்பவில்லை.

சட்டங்களை இயற்றும் அதிகாரம் எங்களிடம் உள்ளது என்று பாராளுமன்றத்தில் அமித் ஷா கூறினார். மக்களுக்காக உழைக்க உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகளை பறிக்க அல்ல.

ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக நான்கு கருத்துக் கணிப்புகளில் தோல்வியடைந்தது. அவர்கள் பின்கதவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றனர்.

இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு "கறுப்பு நாள்".இ து டெல்லி மக்களின் வாக்குரிமையை அவமதிக்கும் செயலாகும்.

டெல்லி சேவைகள் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News