இந்தியா

வருமான வரித்துறை சட்டவிரோதமாக வங்கிக் கணக்கிலிருந்து 65 கோடி பணமெடுத்துள்ளது: காங்கிரஸ் புகார்

Published On 2024-02-21 15:11 GMT   |   Update On 2024-02-21 15:11 GMT
  • வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
  • பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது

வருமான வரித்துறை சட்டவிரோதமாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 65 கோடி பணத்தை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் இத்தகைய செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பல்வேறு வங்கிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கணக்குகளிலிருந்து வருமான வரித்துறை ஜனநாயக விரோதமாக ₹ 65 கோடியை எடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன் கூறியுள்ளார்.

பிப்ரவரி 16-ல் காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ₹ 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News