பாகிஸ்தானை தனிமைப்படுத்தி, பாடம் கற்பிக்க வேண்டும் - காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- தெலுங்கானா சாதிவாரி கணக்கெடுப்பு மாடலை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்
- சிந்து நதி நீரை இந்தியாவால் நிறுத்த முடியாது. அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும்
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, பயங்கரவாதத்தை தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதுடன் பாடம் கற்பிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்கவும் இதுவே சரியான நேரம் என்று மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
மேலும், தெலுங்கானா சாதிவாரி கணக்கெடுப்பு மாடலை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு உடனடியாக தேவையான நிதியை ஒதுக்கி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் தெளிவான காலக்கெடுவை மத்திய அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.