இந்தியா

இந்திரா காந்தி நினைவு தினம்- நினைவிடத்தில் சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் அஞ்சலி

Published On 2025-10-31 09:16 IST   |   Update On 2025-10-31 09:16:00 IST
  • காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
  • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41-வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News