இந்தியா
null

ரஜோரியில் பாகிஸ்தான் தாக்குதல்- அரசு அதிகாரி பலி: உமர் அப்துல்லா இரங்கல்

Published On 2025-05-10 07:36 IST   |   Update On 2025-05-10 07:39:00 IST
  • காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது.
  • அதிகாரி ராஜ்குமார் தப்பா உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் 3-வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது.

எனினும், காஷ்மீர் மாநிலம் ரஜோரி நகரம் மீது பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதார். மாவட்ட வளர்ச்சித்துறை கூடுதல் ஆணையர் ராஜ்குமாரின் வீடு தாக்குதலில் உருகுலைந்தது.

பாகிஸ்தான் தாக்குதலில் அதிகாரி ராஜ்குமார் தப்பா உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 



Tags:    

Similar News