இந்தியா

எல்லையில் அத்துமீறல்- 16 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம்- இந்தியா

Published On 2025-05-08 15:26 IST   |   Update On 2025-05-08 15:30:00 IST
  • இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
  • தாக்குதலில் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது.

சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த விதிகளை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது

இதற்கிடையே நேற்றிரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

குறிப்பாக அவந்திபூரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட்டு, அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, அதாம்பூர், பதிண்டா, சண்டிகார், நநல், பலோடி, உட்டார்லை, பூஜ் ஆகிய இடங்கில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் சரமாரி தாக்குதல் நடத்தியது.

இந்திய விமானப்படை எஸ்-400 சுதர்ஷன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை சிஸ்டம் மூலம் அவைகள் தாக்கி அழிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 16 பேர் உயிரைப் பறித்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News