இந்தியா

கேரளாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 வங்கதேசத்தினர் கைது

Published On 2025-01-31 09:55 IST   |   Update On 2025-01-31 09:56:00 IST
  • எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் வங்கதேசத்தினர் செய்யப்பட்டனர்.
  • 2 வாரங்களுக்கு முன்பு தஸ்லிமா பேகம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த 27 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரவூர் பகுதியில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் வங்கதேசத்தினர் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கதேசத்தை சேர்ந்த 28 வயதான தஸ்லிமா பேகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்ட காவல் அதிகாரி வைபவ் சக்சேனா தொடங்கிய 'ஆபரேஷன் கிளீன்' என்ற சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News