இந்தியா

Video: எனக்கு ஓட்டுபோடாத முஸ்லிம்களுக்கு உதவி செய்யமாட்டேன் - பாஜக எம்எல்ஏ பிரதீப் சவுத்ரி

Published On 2024-12-01 16:45 IST   |   Update On 2024-12-01 16:45:00 IST
  • பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ள பிரதீப் சவுத்ரியிடம் பஸ்லு என்ற முஸ்லீம் நபர் உதவி கேட்டு வந்துள்ளார்.
  • உங்களிடம் இருந்து எனக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ. பிரதீப் சவுத்ரி கூறியுள்ளார்.

எனக்கு ஓட்டு போடாத உங்களுக்கு நான் உதவி செய்ய மாட்டேன் என்று உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ. பிரதீப் சவுத்ரி பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ள பிரதீப் சவுத்ரியிடம் பஸ்லு என்ற முஸ்லீம் நபர் உள்ளூர் ரேஷன் டீலருடன் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக உதவி கேட்டு அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அந்த வீடியோவில், உதவி கேட்டு வந்தவரிடம் பேசிய எம்.எல்.ஏ. பிரதீப் சவுத்ரி, "என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. உங்களிடம் இருந்து எனக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. நான் உங்களுக்கு நிறைய முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் கொடுத்தேன். ஆனால் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக உத்தரபிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை பாஜக ஆட்சியாளர்கள் நடத்தும் விதம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. 

Tags:    

Similar News