இந்தியா

கணவனின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி.. 3 மகள்களை விஷம் வைத்து கொன்ற கொடூரம்

Published On 2025-07-27 16:26 IST   |   Update On 2025-07-27 16:26:00 IST
  • 5, 8, 10 வயது மகள்களுக்கு பூச்சிக்கொல்லி கலந்த உணவை வழங்கியுள்ளார்.
  • குழந்தைகளின் உடலில் விஷம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில் கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து, தனது மூன்று சிறு குழந்தைகளுக்கும் விஷம் வைத்துக் கொன்ற 27 வயது தாய் கைது செய்யப்பட்டார்.

தானேவை சேர்ந்த சந்தியா சந்தீப் என்ற அந்தப் பெண், ஜூலை 20 அன்று, தனது 5, 8, 10 வயது மகள்களுக்கு பூச்சிக்கொல்லி கலந்த உணவை வழங்கியுள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் இருவர் ஜூலை 24 மற்றும் 25 ஆம் தேதிகளிலும், மற்றொரு குழந்தை ஜூலை 24 ஆம் தேதியன்றும் உயிரிழந்தனர்.

முதலில் விபத்து மரணமாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சனிக்கிழமை இரவு வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைகளின் உடலில் விஷம் இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. தாய் சந்தியா இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

கணவரின் குடிப்பழக்கம் மற்றும் குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாகவே இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News