இந்தியா
தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்- வைரல் வீடியோ
- விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர்.
- வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம், குப்த்காஷியில் இன்று 5 பயணிகளுடன் கேதர்நாத் புறப்பட்ட தனியார் ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
பிரச்சனை குறித்து அறிந்துக் கொண்ட விமானி சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அருகிலுள்ள காலியான சாலையில் அவசரமாக தரையிறக்கினார்.
இதனால், விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளும் காயமின்றி தப்பினர். இருப்பினும், விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் விரைந்து விமானியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தரையிறக்க முற்பட்டபோது, ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதில் சாலையில் இருந்த கார் சேதமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த குழு ஹெலிகாப்டரை சாலையில் இருந்து அகற்றி, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தது.
வானில் சென்ற விமானம் திடிரென தரையில் இறக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.