இந்தியா
அதிகனமழை எச்சரிக்கை- கேரளாவில் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
- அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாலக்காடு, இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.