இந்தியா

அந்த விஷயத்தில் என்னை இழுக்காதீங்க.. பா.ஜ.க. எம்.பி. மழுப்பல்

Published On 2023-09-22 11:10 GMT   |   Update On 2023-09-22 11:10 GMT
  • மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், ஏற்கனவே இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து விட்டார்.
  • சமூக வலைதளத்தில் சிலர் கட்டுக்கதைகளை வெளியிட்டு புகழை கெடுக்க முயற்சி.

பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி எதிர்க்கட்சி எம்.பி.யான இஸ்லாமியரை பார்த்து தீவிரவாதி என்றும் கொச்சையான வார்த்தைகளையும் பாராளுமன்றத்திலேயே பேசிய போது அருகில் உட்கார்ந்து சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் தற்போது தனக்கு சரியாக கேட்கவில்லை என மழுப்பி உள்ளார்.

இது குறித்து பா.ஜ.க. எம்.பி. ஹர்ஷவர்தன் தனது வலைதளத்தில், "எக்ஸ் தளத்தில் எனது பெயர் டிரெண்டிங் ஆவதை பார்த்தேன். இரண்டு எம்.பி.க்கள் அவையில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்திய விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்தி இருப்பது பொருத்தமற்ற செயல். எங்களின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், ஏற்கனவே இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து விட்டார்."

"சமூக வலைதளத்தில் எனக்கு எதிராக எழுதி வரும் இஸ்லாமிய நண்பர்களுக்கு, ஒரு சமூகத்திற்கு எதிராக அத்தகைய மொழியாடல் உபயோகிக்கப்படும் போது நான் அவ்வாறு செய்திருப்பேன் என்று நம்புகிறீர்களா? அரசியல் சூழ்ச்சி காரணமாக சமூக வலைதளத்தில் சிலர் இதுபோன்ற கட்டுக்கதைகளை வெளியிட்டு எனது புகழை கெடுக்க முயற்சிக்கின்றனர்."

"எனது 30 ஆண்டு கால பொது வாழ்க்கையில், நான் லட்சக் கணக்கான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுடன் எனது தொகுதி மட்டுமின்றி வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் பழகி இருக்கிறேன். எனது சிறுவயதில் இஸ்லாமிய நண்பர்களுடன் விளையாடி இருக்கிறேன். என்னை பற்றி நன்கு அறிந்து கொண்டிருக்கும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அவர்களை பற்றி நான் எத்தகைய மதிப்பு கொண்டிருக்கிறேன் என்று நன்றாகவே தெரியும்."

"சாந்தினி சௌக் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருப்பதில் நான் பெருமகிழ்ச்சியாக உணர்கிறேன். அனைத்து சமூகத்தினரின் ஆதரவின்றி, இது சாத்தியமாகி இருக்காது."

"இந்த விவகாரத்தில் எனது பெயர் தொடர்புப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து நான் வருத்தமடைகிறேன். அங்கு நடந்த களேபரத்தில், அங்கு என்ன பேசிக் கொண்டனர் என்றே எனக்கு சரியாக கேட்கவில்லை. எனது வாழ்க்கையில் எனக்கென சொந்த கொள்கைகள் உள்ளன," என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News