தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் என்ன சொல்லப் போகிறார்? - ப.சிதம்பரம் கேள்வி
- ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
- எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன
அப்போது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஞானேஷ் குமாருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், " வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் S.Y.குரேஷி, O.P.ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடுமையாக விமர்சித்ததுள்ளனர்.
குடிமகனோ, தேர்தலில் பங்களிப்பாளராக இருப்பவரோ குற்றச்சாட்டு முன்வைக்கும்போது அதை விசாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் வேலையே தவிர, எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.
மதிக்கத்தக்க இந்த மூன்று பேரது விமர்சனத்திற்கு ஞானேஷ் குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்?" என்று பதிவிட்டுள்ளார்.