இந்தியா

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் இல்லை: மத்திய அரசு

Published On 2023-04-05 15:01 GMT   |   Update On 2023-04-05 15:01 GMT
  • கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி:

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணைய தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையை கழித்து பார்த்தால் 130.2 பேருக்கு ஆதார் எண்கள் உள்ளன' என்றார்.

Tags:    

Similar News