உத்தரகாண்ட் அரசு பள்ளிகளில் தினமும் பகவத் கீதை உபதேசம் கட்டாயம் - பாஜக அரசு உத்தரவு
- மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ராமாயணம், பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும்.
- வார இறுதியில் ராமாயணம், பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்
உத்தரகாண்டில் உள்ள 7,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யை ஆம்மாநில பாஜக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த புதிய பாடத்திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் காலை பிரார்த்தனையில் மானவர்கள் தினமும் ராமாயணம் மற்றும் பகவத் கீதை வாசகங்களை கூறுவது கட்டாயம் என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், "மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ராமாயணம் மற்றும் பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகம் கண்டிப்பாக கூற வேண்டும். வார இறுதியில் ராமாயணம், பகவத் கீதை தொடர்பாக வகுப்பறைகளில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டின் இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின குழந்தைகளை கட்டாயப்படுத்தி ராமாயணம், பகவத் கீதை கூற சொல்வது கொடுமையானது என்று இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.