இந்தியா

ஜி20 மாநாடு: டெல்லியில் நடமாடும் போலீஸ் நிலையம்

Published On 2023-09-08 11:08 GMT   |   Update On 2023-09-08 11:08 GMT
  • பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
  • நடமாடும் போலீஸ் நிலையம், ஜி-20 மாநாடு முடிவடைந்தபிறகும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக ஒரு வேன், போலீஸ் நிலைய வடிவமைப்பில் மாற்றப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் உட்காருவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மற்றும் போலீசாருடன் சாதாரண போலீஸ் நிலையம் போல இது செயல்படும். இதில் இன்டர்நெட் வசதி மற்றும் மாநாட்டின் முக்கிய செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. 24 மணிநேரமும் செயல்படும் இது, எங்காவது அவசர நிலை ஏற்பட்டால் அங்கு உடனடியாக இந்த போலீஸ் நிலையம் சென்றடையும். இந்த நடமாடும் போலீஸ் நிலையம், ஜி-20 மாநாடு முடிவடைந்தபிறகும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News