இந்தியா

நெடுஞ்சாலை பணிகளை முடிக்காமல் மோசடி: கேரளாவில் ரூ.125 கோடி சுங்கவரி வசூலித்த ஆந்திர எம்.எல்.ஏ.

Published On 2023-10-21 04:03 GMT   |   Update On 2023-10-21 04:03 GMT
  • 10 ஆண்டுகளாக சாலை பணிகளை முடிக்காமல் சுங்க கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.
  • அமலாக்கத்துறையினர் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் ஆத்மகுரு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மேகபதி விக்ரம் ரெட்டி.

இவர் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் சுங்கவரி வசூலில் ஈடுபட்டார்.

இந்த பணியில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐதராபாத்தில் உள்ள மேகபதி விக்ரம் ரெட்டியின் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

விக்ரம் ரெட்டி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையஅதிகாரிகள் மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த சில என்ஜினியர்களுடன் சேர்ந்து சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

10 ஆண்டுகளாக சாலை பணிகளை முடிக்காமல் சுங்க கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது.

தேசிய நெடுஞ்சாலையின் மன்னுட்டி-அங்கமாலி இடையே 544 பணிகள் பாதியில் முடிக்கப்பட்டு, ரூ.102.44 கோடிக்கு சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளனர்.

சாலை அமைப்பதற்காக ரூ.721 கோடி செலவழித்துள்ள நிலையில், ஏற்கனவே சுங்கச்சாவடியில் ரூ.1,250 கோடி வசூலிக்கப்பட்டு ள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அமலாக்கத்துறையினர், மேகபதி விக்ரம் ரெட்டி எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்தனர். உதவி இயக்குநர் சத்யவீர்சிங் தலைமையிலான 8 அமலாக்க துறை அதிகாரிகள் குழு எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கே.எம்.சி. நிறுவனத்தின் வங்கி இருப்பு ரூ.125.21 கோடியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News