இந்தியா
ப.சிதம்பரம்
பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு
- கொரோனாவால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 23-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
- டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு பேரணியாக சென்றனர்.
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.