இந்தியா

60 வயதில் திருமணம் செய்துகொண்ட மேற்குவங்க பாஜக முன்னாள் தலைவர்

Published On 2025-04-19 09:02 IST   |   Update On 2025-04-19 09:02:00 IST
  • திலீப் கோஷ் தனது 60 ஆவது வயதில் 51 வயதான ரிங்கு மஜும்தாரை திருமணம் செய்துள்ளார்.
  • ரிங்கு மஜும்தாருக்கு இது 2 ஆவது திருமணமாகும்.

மேற்கு வங்க பாஜகவின் முன்னாள் தலைவரான திலீப் கோஷ், அவரது கட்சியை சேர்ந்த ரிங்கு மஜும்தார் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்து வந்த திலீப் கோஷ் தனது 60 ஆவது வயதில் 51 வயதான ரிங்கு மஜும்தாரை திருமணம் செய்துள்ளது அம்மாநிலத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த தம்பதிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திலீப் கோஷுக்கு தான் இது முதல் திருமணம். ரிங்கு மஜும்தாருக்கு இது 2 ஆவது திருமணமாகும். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பின்பு பேசிய திலீப் கோஷ், "என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. எனது தனிப்பட்ட வாழ்க்கை எனது அரசியல் வாழ்க்கையை பாதிக்காது. தற்போது திருமணம் செய்து கொண்டதன் மூலம் தனது தாயின் நீண்டகால விருப்பம் நிறைவேறியுள்ளது" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News