தாக்குதல் நடத்தவில்லை என அப்பட்டமாக பொய் சொல்கிறது பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி
- பாகிஸ்தான நேற்று இந்திய நகரங்கள் மற்றும் மக்கள் கட்டமைப்புகள் மற்றும் ராணுவ அமைப்புகளை குறிவைத்து ஆத்திரமூட்டும் வகையில் தாக்குதல் நடத்தியது.
- வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கத்துடன் தாக்குதலுக்கு வகுப்புவாத சாயல் பூச முயற்சிக்கிறது.
பாகிஸ்தான் நேற்றிரவு இந்தியாவின் பல்வேறு ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
இந்த நிலையில் நேற்றைய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான நேற்று இந்திய நகரங்கள் மற்றும் மக்கள் கட்டமைப்புகள் மற்றும் ராணுவ அமைப்புகளை குறிவைத்து ஆத்திரமூட்டும் வகையில் தாக்குதல் நடத்தியது.
இந்திய ராணுவம் அதற்கு சரியான பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு இயந்திரம் அதிகாரப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் மறுப்பது, அவர்களின் இரட்டை வேடத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
உலக நாடுகளை ஏமாற்றும் வகையில் பூஞ்ச், அமிர்தசரஸ் நகரில் இந்தியாவே தாக்குதல் நடத்தியதாக கூறியது. நமது நாட்டை நாமே தாக்குவோம் போன்ற சீர்குலைந்த அறிக்கையை பாகிஸ்தானால் மட்டுமே வெளியிட முடியும்.
பாகிஸ்தான் தனது செயல்களுக்கு பொறுப்பேற்பதற்குப் பதிலாக, அமிர்தசரஸ் போன்ற தனது சொந்த நகரங்களை குறிவைத்து பாகிஸ்தானைக் குறை கூற முயற்சிப்பது இந்திய ஆயுதப் படைகள்தான் என்ற அபத்தமான மற்றும் மூர்க்கத்தனமான கூற்றுக்களை முன்வைத்துள்ளது.
இதுபோன்று சொல்வதில் நன்கு அறிந்தவர்கள் என்பதை அவர்களது வரலாறு காட்டும். டிரோன் தாக்குதல் மூலம் நங்கமா சாஹிப் குருத்வாராவை இந்தியா குறிவைத்ததாக பாகிஸ்தான் தவறான தகவலைப் பரப்பியது, ஒஇது மற்றொரு அப்பட்டமான பொய். வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு வகுப்புவாத சாயலை சேர்க்க பாகிஸ்தான் தீவிரமாக முயற்சிக்கிறது.
இவ்வாறு வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.