இந்தியா
டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. தாழ்வான பகுதிகளை சூழ்ந்த தண்ணீர் - தத்தளிக்கும் மக்கள்
- தெருக்கள் நீரோடைகளாகவும், சந்தைப் பகுதிகள் குளங்களாகவும் மாறி வருகின்றன.
- தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.
தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
டெல்லியில் யமுனை நதி அபாய அளவைத் தாண்டி ஓடி வருவதால், பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெருக்கள் நீரோடைகளாகவும், சந்தைப் பகுதிகள் குளங்களாகவும் மாறி வருகின்றன.
மஞ்சு கா தில்லா-விலிருந்து மதன்பூர் காதர் மற்றும் பதர்பூர் வரை வசிக்கும் பல குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளன.
இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி யமுனை நதி 207 மீட்டர் உயரத்தை எட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். பலர் சாலைகளில் அமைக்கப்பட்ட சிறிய கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.