குல்லு
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவால் சாலைகள் துண்டிப்பு
- குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக 'ஜீவா' சிற்றாற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- பாலம்பூர், ஜோகிந்தர்நகர், நஹான் ஆகிய பகுதிகளில் மிகக் கனமழை முதல் அதிக கனமழை பதிவாகியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் நிகழ்ந்துள்ளது.
பார்வதி நதி ஆபத்தான அளவில் நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக 'ஜீவா' சிற்றாற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரியில் ஏற்பட்ட நிலச்சரிவு அந்தப் பாதையில் போக்குவரத்தைத் தடை செய்துள்ளது.
வெள்ளம் காரணமாக காங்கிரா மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 20 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குல்லுவில் 3 பேர் மாயமாகியுள்ளனர்.
நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை உருகியதால் காசா-சம்தூ சாலை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
பாலம்பூர், ஜோகிந்தர்நகர், நஹான் ஆகிய பகுதிகளில் மிகக் கனமழை முதல் அதிக கனமழை பதிவாகியுள்ளது.
காங்கிரா, மண்டி, சிம்லா, சிர்மௌர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.