இந்தியா

சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்.. பாடம் எடுத்த டி.கே.சிவகுமார் - பதில் சொன்ன சித்தராமையா

Published On 2025-11-27 21:32 IST   |   Update On 2025-11-27 21:32:00 IST
  • அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்
  • ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.

கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர். இந்த பிரச்சனைக்கு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய டிகே சிவகுமார் "வார்த்தையின் சக்தி தான் உலகத்தின் சக்தி. உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது ஒரு நீதிபதியாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த சித்தராமையா, "கர்நாடக மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒரு குறிப்பிட்ட கணதிற்கு அல்ல, ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.

நான் உட்பட காங்கிரஸ் கட்சி, நமது மக்களுக்காக இரக்கம், நிலைத்தன்மை மற்றும் தைரியத்துடன் நடந்து வருகிறது. கர்நாடகக்கு நாம் கோடுத்த வாக்கு வெறும் முழக்கம் அல்ல. அந்த வார்த்தை தான் நமது உலகம்" என்று தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களிடையே வெளிப்படையாக வார்த்தை மோதல் உருவாகி உள்ளது காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News