தூய்மை பணியால் வைரலான முதியவர்- வீடியோ
- ஒரு சில மனிதர்கள் தன்னார்வத்துடன் வீதியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபடுவதை நாம் பார்த்து வருகிறோம்.
- வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. சுற்றுச்சூழலை நாம் சுத்தமாக பேணி காப்பதன் மூலம் நோய் வராமல் தடுத்து வரும்முன் காக்கலாம். ஆனால் இந்தியாவில் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் மேலாண்மை ஆங்காங்கே கேள்விக்குறிக்கு உள்ளாகி வருவது வேதனை அளித்தாலும் ஒரு சில மனிதர்கள் தன்னார்வத்துடன் வீதியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபடுவதை நாம் பார்த்து வருகிறோம்.
அப்படியான மனிதர்களில் ஒருவர்தான் சூர்ய நாராயணன். பெங்களூருவை சேர்ந்த 82 வயது முதியவரான இவர் வசித்து வரும் பகுதியில் வெகுநாட்களாக தூய்மை பணி நடக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் வீதியில் துடைப்பத்துடன் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். அவருடைய மனைவியும் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் இறங்கி அங்கே தேங்கியிருந்த குப்பையை அகற்றினர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.