இந்தியா

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

Published On 2025-01-07 15:03 IST   |   Update On 2025-01-07 15:15:00 IST
  • தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
  • அப்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார்.

புதுடெல்லி:

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும்.

இடைத்தேர்தலுக்காக வருகிற 10-ம் தேதி மனுதாக்கல் தொடங்கும். 17-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

வேட்புமனு மீதான பரிசீலனை 18-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ம் தேதி எனவும் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, ஈரோடு மாநராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர் அறைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அரசியல் தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News