இந்தியா

e-Vitara: குஜராத் Maruti Suzuki ஆலையில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - வீடியோ

Published On 2025-08-26 11:38 IST   |   Update On 2025-08-26 11:38:00 IST
  • அகமதாபாத் அருகே ஹன்சல்பூரில் மாருதி சுசுகி ஆலை அமைந்துள்ளது.
  • அடுத்த ஆண்டு இந்த SUV மின்சார வாகனம் சந்தியில் அறிமுகமாக உள்ளது.

ரூ.5,477 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று குஜராத் மாநிலதிற்கு சென்றிருந்தார்.

நேற்று மாலை, அகமதாபாத்தின் நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார்.

இந்நிலையில் இன்று அகமதாபாத் அருகே உள்ள ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் e-Vitara எனப்படும் பேட்டரி மின்சார கார் உற்பத்தி யூனிட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி e-Vitara, ஜப்பான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்த SUV மின்சார வாகனம் சந்தியில் அறிமுகமாக உள்ளது.  

Tags:    

Similar News