இந்தியா

ட்ரோன் ( கோப்பு படம்)

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் கிடந்த ட்ரோன்: பாதுகாப்பு படையினர் விசாரணை

Update: 2022-07-04 10:12 GMT
  • எல்லைப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை
  • ட்ரோன் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு.

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சில்லியாரி கிராமம் அருகே பறக்கும் சாதனம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அது ட்ரோன் ஆக இருக்கலாம் என்று எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். எனினும் அந்த ஆளில்லா விமானத்தை யாரும் பார்த்தார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு எல்லைப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றதாகவும் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் ஏதுவும் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் இந்த பணிக்கு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அண்டை நாட்டில் இருந்து ஏவப்படும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News