இந்தியா
null

இந்தியா - பாகிஸ்தான் பஞ்சாயத்துக்கு வந்த அதிபர் டிரம்ப்: மூச்சுக் காட்டாத பிரதமர் மோடி

Published On 2025-05-12 21:15 IST   |   Update On 2025-05-12 21:16:00 IST
  • இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம் என டிரம்ப் கூறினார்.
  • பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய பல கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரதமர் மோடி தனது இன்றைய உரையில் அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு, காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என ட்ரம்ப் கூறியது தொடர்பாக பிரதமர் தனது உரையில் எதுவும் பேசவில்லை.

மூன்றாம் தரப்பின் தலையீடு கூடாது என்ற இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாட்டை மோடி வெளிப்படையாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக மூச்சு கூட காட்டவில்லை. 

Tags:    

Similar News