இந்தியா

சட்டசபையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடி அதிர்ச்சி தந்த டி.கே. சிவகுமார் - பாஜகவினர் ஆரவாரம் - வீடியோ வைரல்

Published On 2025-08-22 13:07 IST   |   Update On 2025-08-22 13:07:00 IST
  • பெங்களூரு சின்னசாமி மைதான கூட்டநெரிசல் குறித்த விவாதம் நடைபெற்றது.
  • உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே' பாடலை பாடினார்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டி.கே. சிவகுமார் துணை முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று சட்டமன்றக் கூட்டத்தில் அவையில் டி.கே. சிவகுமார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பாடலை பாடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

பெங்களூரு சின்னசாமி மைதான கூட்டநெரிசல் குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா, டிகே சிவகுமார் அவரது அரசியல் வாழ்வில் முந்தைய காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து இயங்கியதை சுட்டிக்காட்டினார்.

உடனே இருக்கையில் இருந்து எழுந்த சிவகுமார் ஆர்எஸ்எஸ் இன் 'நமஸ்தே சதா வத்சலே' பாடலை பாடினார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

எதிர் இருக்கைகளில் இருந்த பாஜகவினர் தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

2025 ஐபிஎல் போட்டியில் ஆர்சிவி வெற்றியை கொண்டாட சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவின்போது வெளியே நுழைவாயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், 56 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News