இந்தியா

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி: டெல்லியில் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2023-11-08 16:03 IST   |   Update On 2023-11-08 16:03:00 IST
  • டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
  • காற்று மாசு அதிகரிப்பால் காற்றின் தரம் அங்கு மிகவும் மோசமடைந்துள்ளது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

இந்நிலையில், காற்று மாசு அதிகரித்து வருவதன் எதிரொலியாக டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வரும் 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என டெல்லி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News