இந்தியா

காது கேளாத தலித் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை.. பாஜகவின் மனநிலையே காரணம் என்கிறார் ராகுல்

Published On 2025-04-18 12:37 IST   |   Update On 2025-04-18 12:37:00 IST
  • பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித்துகள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன.
  • பாதிக்கப்பட்டவர்கள் உதவியற்றவர்கள் என்ற பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் பெண்கள் விரோத மனநிலையின் விளைவு இது.

உத்தரப் பிரதேசத்தில் ராம்பூரை சேர்ந்த 11 வயது காது கேளாத வாய் பேச முடியாத தலித் சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் காணாமல் போனாள். மறுநாள் காலை ஒரு வயலில் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள். சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது.

மேலும் சிறுமியின் உடலில் கடித்த அடையாளங்கள் இருந்தன. மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவதிற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் 11 வயது தலித் சிறுமி மீது நடத்தப்பட்ட கொடூரமும், கொடுமையும் மிகவும் வெட்கக்கேடானதும், அதிர்ச்சியளிப்பதும் ஆகும்.

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற குற்றங்கள், பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித்துகள், குறிப்பாக பெண்கள், சிறுமிகள் முற்றிலும் பாதுகாப்பற்றவர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன.

குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கைப் பற்றி பயப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் உதவியற்றவர்கள் என்ற பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் பெண்கள் விரோத மனநிலையின் விளைவு இது!. எல்லாவற்றிற்கும் மேலாக, உத்தரப் பிரதேசத்தின் மகள்கள் எவ்வளவு காலம் இத்தகைய மிருகத்தனத்திற்கு பலியாவார்கள்?

குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விரைவில் நீதி வழங்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News