இந்தியா

உ.பி.யை தொடர்ந்து ராஜஸ்தான் பள்ளிகளிலும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்

Published On 2026-01-03 22:29 IST   |   Update On 2026-01-03 22:29:00 IST
  • பள்ளிகளில் வகுப்பு தொடங்கும் முன் செய்தித்தாள் வாசிக்க மாணவர்களுக்கு 10 நிமிடம் ஒதுக்கவேண்டும்.
  • இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும்.

ஜெய்ப்பூர்:

உத்தர பிரதேசத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்திலும் செய்தித்தாள் வாசிப்பை கட்டாயமாக்கி அம்மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.

பள்ளிகளில் காலை வகுப்பு தொடங்கும் முன் செய்தித்தாள் வாசிப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் ஒதுக்கவேண்டும். அந்த 10 நிமிடங்களில் தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டு செய்திகளில் இருந்து முக்கிய செய்திகளை ஒருவருக்கொருவர் வாசித்துக் காட்ட வேண்டும். இதற்காக இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டது.

மாணவர்களின் பொது அறிவு, சொல்வளம், விமர்சன சிந்தனை, கவனத்திறனை மேம்படுத்தல், சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை உருவாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், உத்தா பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும் இனி 10 நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News