இந்தியா
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி
- மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உறுதி செய்து கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கார்கே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நிலையாகவும் நலமுடனும் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.