அரசியலமைப்பு மக்களின் உரிமையை பாதுகாக்கும் கேடயம்: ராகுல் காந்தி
- நம்முடைய அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்குமான சிறந்த ஆயுதம்.
- அது நம்முடைய குரல். நம்முடைய உரிமைகளை பாதுகாக்கும் கேடயம்.
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இந்த விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
நம்முடைய அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்குமான சிறந்த ஆயுதம். அது நம்முடைய குரல். நம்முடைய உரிமைகளை பாதுகாக்கும் கேடயம். நமது குடியரசு இந்த வலிமையான அடித்தளத்தின் மீது நிற்கிறது. மேலும் அது சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலமாகவே மேலும் வலுப்பெறும்.
அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்பது இந்தியக் குடியரசைப் பாதுகாப்பதாகும்; இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். ஜெய் ஹிந்த்! ஜெய் சம்விதான்! அரசியலமைப்பு பாறைபோன்ற உறுதியுடன் பாதுகாப்ப உறுதிக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.