இந்தியா

வரும் 22ம் தேதி ராமர் கோவில்களில் காங்கிரஸ் சார்பில் சிறப்பு பூஜைகள்- சித்தராமையா

Published On 2024-01-12 10:27 GMT   |   Update On 2024-01-12 10:58 GMT
  • ஸ்ரீராமனை தரிசிக்க நாங்கள் அவர்கள் (பாஜக) பின்னால் ஓடவில்லை.
  • பாஜகவின் அரசியலை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22ம் தேதி அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா அன்று, கர்நாடகாவில் உள்ள ராமர் கோவில்களில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கர்நாடக முதல்வர் மேலும் கூறியதாவது:-

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பு எனக்கு வரவில்லை. ஸ்ரீராமனை தரிசிக்க நாங்கள் அவர்கள் (பாஜக) பின்னால் ஓடவில்லை.

நாங்களும் ராமரை வணங்குகிறோம். ஆனால் அவர்கள் (பாஜக) ராமர் கோவில் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம். ஸ்ரீராமனை அல்ல.

நான் ஜனவரி 22க்குப் பிறகு, நேரம் கிடைக்கும்போது அயோத்திக்குச் சென்று ஸ்ரீராமரை தரிசிப்பேன். நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் அல்ல. பாஜகவின் அரசியலை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News