இந்தியா

மும்பை திரும்பிய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

கோவாவில் இருந்து மும்பை திரும்பினர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

Published On 2022-07-02 21:14 GMT   |   Update On 2022-07-02 21:14 GMT
  • சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 29-ம் தேதி இரவு முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
  • மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கோவாவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தார்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதன்மூலம் அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் புதிய அரசு நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கோவாவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தார்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஏக்நாத் ஷிண்டேவை அக்கட்சியில் இருந்து நீக்கினார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

Tags:    

Similar News