இந்தியா

விவசாயிகள் பேரணிக்கு எதிராக தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்

Published On 2024-02-13 04:08 GMT   |   Update On 2024-02-13 04:08 GMT
  • இன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்த இருக்கிறார்கள்.
  • டெல்லி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரியானா விவசாயிகள் டிராக்டர்களுடன் செல்லாத வகையில் அம்மாநில அரசு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்க தலைவர் ஆதிஷ் அகர்வாலா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுந்தியுள்ளார்.

அதில், "இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணிக்கு எதிராக தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், பாதிக்கக் கூடிய வகையிலான எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தும் வகையில், நேற்றிரவு மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

Tags:    

Similar News