இந்தியா

4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல்

Published On 2025-05-25 11:24 IST   |   Update On 2025-05-25 11:24:00 IST
  • சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
  • வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

குஜராத், கேரளா, பஞ்சாப், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அதன்படி, குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் காடி, விசாவதர், கேரளாவின் நீலாம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதேபோல், பஞ்சாபின் லூதியானா மேற்கு, மேற்குவங்கத்தின் கலிகஞ்ச் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்றும் வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News