இந்தியா

முன்ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்

Published On 2025-10-05 10:59 IST   |   Update On 2025-10-05 10:59:00 IST
  • கரூர் மாவட்டச்செயலாளர் உள்பட 2 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
  • மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதவிர கரூர் மாவட்டச்செயலாளர் உள்பட 2 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 2 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்ஜாமின் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க கோரி நாளை முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News