இந்தியா

ஒடிசாவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்- பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

Published On 2023-06-26 10:44 IST   |   Update On 2023-06-26 11:00:00 IST
  • திருமண கோஷ்டியினர் இருந்த பஸ் கடுமையாக நொறுங்கியது.
  • தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் திகபகண்டி பகுதியை சேர்ந்த திருமண வீட்டார் நேற்று தனி பஸ்சில் பெர்காம்பூர் நகருக்கு சென்றனர். நேற்று அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் பங்கேற்றனர்.

மாலை அவர்கள் பஸ்சில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

திகபகண்டி-பெர்காம் பூர் சாலையில் அவர்கள் பஸ் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே பயணிகள் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்துக்குள் இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் திருமண கோஷ்டியினர் இருந்த பஸ் கடுமையாக நொறுங்கியது. இரு பஸ்களிலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறினார்கள். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளை அகற்றி சிக்கி இருந்தவர்களை போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்டனர். அப்போது 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது.

50-க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News