இந்தியா
அடேங்கப்பா... மணமகனுக்கு ரூ.21 கோடி வரதட்சணை கொடுத்த மாமனார் - வைரல் வீடியோ
- பெட்ரோல் பங்க் நன்கொடையாக கொடுக்கப்பட்டது.
- வீடியோ வைரலாகி சமூக வலைத்தளவாசிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருமணத்திற்காக வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என சட்டம் உள்ளது. இருப்பினும் ஆங்காங்கே வரதட்சணை கொடுமையால் புதுப்பெண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகள் குடும்பத்தினரால் மணமகனுக்கு பெட்டி, பெட்டியாக வரதட்சணைகள் வழங்கப்பட்டது. குண்டூசி முதல் ஏ.சி. வரை சீர்வரிசைகளும், 1 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி, 210 பிகா நிலம், ரூ.1½ கோடி ரொக்கம் மட்டுமின்றி பெட்ரோல் பங்க் நன்கொடையாக கொடுக்கப்பட்டது.
வட இந்தியாவில் மார்வாரி மற்றும் ஜாட் கலாசாரத்தில் திருமண சடங்கின்போது பரிசுகள் வழங்குவது இயல்புதான் என்றாலும் வரதட்சணையாக ரூ.21 கோடி மதிப்பிலான பொருட்களை வாரிக் கொடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி சமூக வலைத்தளவாசிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.