VIDEO: பால்கனியில் சிக்கிய இளைஞர்கள்... என்ட்ரி கொடுத்த டெலிவரி ஊழியர் - அடுத்து நடந்த சம்பவம்
- ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் போட்டு வரவழைத்தனர்.
- பலரும் கலவையான கருத்துக்களை பதிவிட்டனர்.
"இரவு பால்கனியில் இருந்தபடி வானத்தை ரசிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்... ஆனால் அப்போது பால்கனி உட்புறமாக மூடிக் கொண்டால் கதவை திறக்க முடியாத அந்த வேதனை எப்படியிருக்கும் ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்...
அதுபோல ஒரு சம்பவம் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்துள்ளது. 2 நண்பர்கள் இரவில் பால்கனியில் பொழுதை கழித்தனர். அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீட்டுக்குள் நுழைய முயன்றபோதுதான் பால்கனி உட்புறமாக பூட்டிக் கொண்டது தெரியவந்திருக்கிறது. வீட்டிற்குள் பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் அவர்களை எழுப்ப மனமில்லாத அவர்கள், திடீரென சாதுரியமாக செயல்பட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் போட்டு வரவழைத்தனர். டெலிவரி செய்பவர் வீடு தேடி வந்தபோது அவரிடம் நடந்த சம்பவத்தை விளக்கி கூறி மாற்றுச்சாவி இருக்கும் இடத்தை சொல்லி அதன் மூலம் கதவைத் திறந்து பால்கனியில் இருந்து விடுதலை பெற்றனர்.
அவர்கள் மாடியில் இருந்து டெலிவரி ஊழியரை வரவேற்பது, அவரிடம் நிலைமையை விளக்கிச் சொல்வது, தங்களை மீட்டதும் அவருக்கு நன்றி சொல்லி சிரிப்பது போன்ற காட்சியுடனான வீடியோவை மிஹிர் கஹுகர் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார், அவரது வீடியோ விரைவாக வைரலானது. பலரும் அவர்களது செயலுக்கு கலவையான கருத்துக்களை பதிவிட்டனர்.