இந்தியா

இந்து கோவில்களின் நிலங்களை நண்பர்களுக்கு கொடுக்க முயலும் பாஜக - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Published On 2025-04-07 09:31 IST   |   Update On 2025-04-07 09:31:00 IST
  • ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியானது.
  • அவர்களுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை.

வக்பு சட்டத்தை அமல்படுத்திய பிறகு, பாஜக இப்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களின் நிலத்தை தங்கள் நண்பர்களுக்கு கொடுக்க முயல்வதாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகையில் வக்பு வாரியத்தை விட கத்தோலிக்க திருச்சபை இந்தியாவில் அதிக நிலங்கங்கள் வைத்துள்ளதாக கட்டுரை ஒன்று வெளியானது.

இதை குறிப்பிட்டு பேசிய உத்தவ் தாக்கரே, " பாஜக 45-வது நிறுவன தினத்தை கொண்டாடும் வேளையில், ராமரின் வழியில் நடக்க முயற்சி செய்யவேண்டும்.

வக்பு சட்டத்திற்கு பிறகு அடுத்த கட்டமாக கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் இந்து கோயில்களின் நிலத்தின் மீதும் கண் வைப்பது இருக்கும். அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு  அவற்றின் முதன்மையான நிலங்களை வழங்குவார்கள். அவர்களுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை. அவர்கள் அதைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர். அனைவரும் கண்களைத் திறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News