இந்தியா

நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி: மத்திய அரசு மீது கார்கே தாக்கு..!

Published On 2025-06-25 17:44 IST   |   Update On 2025-06-25 17:44:00 IST
  • பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளது.
  • மோடி அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரமோ, நடமாடும் சுதந்திரமோ இல்லை.

நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி கொண்டு வந்த நிலையில், அவசரநிலை தினத்தை பாஜக கையில் எடுப்பது, அரசின் தோல்வியை மறைப்பதற்கானது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

இந்தியா சுதந்திரம் பெற்றதில் மற்றும் அரசியலைப்பு உருவாக்கப்பட்டதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் பங்கு ஏதும் இல்லை. அம்பேத்கரின் அரசியலமைப்பை நிராகரித்தன. அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறது அதை கையில் எடுத்து, அரசியலைப்பை பாதுகாப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்பு அபாயத்தில் உள்ளது. மோடி அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரமோ, நடமாடும் சுதந்திரமோ இல்லை. அரசியலமைப்பு பாதுகாப்போம் எனப் பேசிக் கொண்டிருப்பவர்கள், தற்போது 50 வருடத்திற்குப் பிறகு எம்ர்ஜென்சியை கையில் எடுத்துள்ளனர். சிலர் இதை மறந்திருப்பார்கள். இவர்கள் தோண்டி எடுக்கிறார்கள்.

மனுஸ்மிருதியின் கூறுகள் போன்ற நம்முடைய கலாசார அம்சங்கள் இல்லை என பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியலமைப்பை நிராகரித்தன. இதை செய்த அவர்களுக்கு தற்போது ஞானமடைந்துள்ளனர்.

இவர்கள் ஆட்சியில் தோல்வியடைந்துள்ளனர். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மைக்கு பதில் அளிக்காதது, ஊழல், பொருளாதார தோல்வி குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளனர். பொய்கள் மற்றும் தோல்வியை மறைக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

பொருளாதார சமநிலை மிகப்பெரிய அளவில் இடைவெளி பெற்றுள்ளது. அறிவிக்கப்படாத அவசரநிலையை கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News