இந்தியா

காதலியுடன் வாழ மனைவியை கொலை செய்த பாஜக தலைவர்.. ஆடிய நாடகம் அம்பலம்!

Published On 2025-08-17 14:29 IST   |   Update On 2025-08-17 14:29:00 IST
  • ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த பாஜக தலைவர் ரோஹித் சைனி, சஞ்சு என்ற பெண்ணை மணந்தார்.
  • வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தனது மனைவியைக் கொன்று விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிவிட்டதாக போலீசாரை நம்ப வைக்க முயன்றார்.

ராஜஸ்தானில் காதலியுடன் புது வாழ்வை தொடங்க தனது மனைவியை கொலை பாஜக தலைவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித் சைனி, சஞ்சு என்ற பெண்ணை மணந்தார்.

இருப்பினும், ரோஹித் அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்ற மற்றொரு பெண்ணுடன் சிறிது காலமாக திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்து வருகிறார்.

மனைவி சஞ்சு அவர்களின் உறவுக்கு தடையாக இருந்துள்ளார். இந்த மாதம் 10 ஆம் தேதி, சஞ்சு சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வீட்டில் இறந்தார்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரோஹித் முரண்பாடான பதில்களை அளித்தார்.

வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தனது மனைவியைக் கொன்று விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிவிட்டதாக போலீசாரை நம்ப வைக்க முயன்றார்.

இருப்பினும், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த போலீசார், அவர்களது பாணியில் விசாரித்தபோது அவர் காதலி ரிதுவின் தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ரோஹித் சைனியுடன், கொலையைத் தூண்டிய அவரது காதலி ரிது சைனியும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  

Tags:    

Similar News