இந்தியா
தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 1,3-ந் தேதிகளில் பா.ஜ.க. பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார்
- பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
- ஏற்பாடுகளை பாஜக எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. பல்வேறு வீயூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி வருகிற 1-ந் தேதி தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மற்றும் 3-ந் தேதி நிஜமாபாத்தில் பா.ஜ.க பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.